என்ன பன்றதுன்னே தெரியல.... அமைச்சர் இருக்கையில் அமர்ந்த வன்னியரசு! திருமாவளவன் செய்த அந்த ஒரு விஷயம்.... உற்சாகத்தில் தொண்டர்கள்!!!



vanniarasu-starts-work-as-minister-secretariat

தமிழக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியின மக்கள் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வன்னியரசு, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தனது அதிகாரப்பூர்வ பணிகளைத் தொடங்கினார். அமைச்சரின் அறையில் முதல் கோப்புகளில் கையெழுத்திட்டு பணியை ஆரம்பித்தார். இதையடுத்து அவருக்கு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக, சென்னை கோட்டையில் உள்ள அமைச்சர் அலுவலகத்திற்கு வந்த வன்னியரசுவை, விசிக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவன் நேரில் அழைத்துச் சென்றார். பின்னர் அமைச்சர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்த தருணம் அங்கிருந்தோரின் கவனத்தை ஈர்த்தது.

தலைமைச் செயலகத்தில் முதல் நாள்

அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தலைமைச் செயலகத்திற்கு வந்த வன்னியரசுவுக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். அதன்பின் துறை சார்ந்த முக்கிய கோப்புகளை ஆய்வு செய்து கையெழுத்திட்டார். சமூக நீதி மற்றும் பழங்குடியின மக்கள் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கோட்டையே அதிரவைத்த அந்த ஒரு நிமிடம்! மூத்த தலைவருக்கு முதல்வர் விஜய் கொடுத்த மறியாதையை பாருங்க....! நெகிழ்ச்சி வீடியோ...!!!

திருமாவளவன் நேரில் வாழ்த்து

விசிக சார்பில் அமைச்சரவை இடம் கிடைத்துள்ள நிலையில், கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, வன்னியரசுவை அவரே அமைச்சரின் இருக்கையில் அமர வைத்த சம்பவம், கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசிக தொண்டர்களில் உற்சாகம்

தவெக தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் விசிகக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பை கட்சியினர் வரலாற்று முக்கியத்துவமான தருணமாகக் கருதி வருகின்றனர். சமூக நீதி சார்ந்த துறைக்கு விசிக பிரதிநிதி அமைச்சராக வந்திருப்பது, தமிழக அரசியலில் புதிய அரசியல் எழுச்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: கடந்த 60 ஆண்டு ஆட்சியில் நடக்காததை செய்து காட்டிய முதல்வர் விஜய்! தவெக அரசை புகழ்ந்து தள்ளிய பாஜக அர்ஜூனமூர்த்தி..!!!