அரசியல் தமிழகம்

வறுமையில் கூட வாழ்ந்துவிடலாம்! ஆனால் வைகோ போல வாழாதே! வெளியான வீடியோவால் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

Summary:

Vaiko video

தனது பேச்சு திறமையின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தமிழக மக்கள் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான வைகோ. இவர் தனது கம்பீரமான பேச்சின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் மூலம் தொண்டுகள் பல செய்து வருகிறார்.

மேலும் இவர் ஒரு சில சமயங்களில் அந்த கட்சி செய்வது சரி என்னும் அளவிற்கு அந்த கட்சிக்கு ஆதரவாக பேசக்கூடியவர். தற்போது திமுக கட்சியின் தலைவரான ஸ்டாலின் அவர்களை புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது ஸ்டாலின் தான் அடுத்த முதல்வராக வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் இவர் இதற்கு முன்பு ஒரு பேட்டியில் திமுக கட்சியை பற்றி மிகவும் குறையாக பேசியிருந்தார். அதாவது கறைப்படிந்த திமுக, 2ஜி ஊழல், குடும்ப அரசியல் நடத்தும் திமுக, அண்ணாவின் இயக்கத்தை நாசமாக்கிய திமுக, லட்சகணக்கான ஈழ தமிழர்களின் படுகொலைக்கு காரணமான திமுகவுடன் எந்த தமிழ் உணர்வு உள்ளவன் கூட்டு வைத்து கொள்ள முடியும். இவர்களுக்கு எல்லாம் தமிழ் உணர்வு இறந்து போயுள்ளது என்றெல்லாம் பேசியிருந்தார்.

ஆனால் தற்போது இவ்வாறாக பேசியதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.


Advertisement