இன்ப அதிர்ச்சியில் முதல்வர் விஜய்! வங்கி கணக்கில் வந்த பணம்..... அரசு கடனை அடைக்க அதிரடி உதவி!!!
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பல தொண்டர்கள், தமிழக அரசுக்கு ஆதரவாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். ₹5,000 முதல் ₹1.25 லட்சம் வரை தொகைகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான ரசீதுகளும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இதனால் அரசியல் வட்டாரத்திலும் இந்த நடவடிக்கை பேசுபொருளாகியுள்ளது.
நடிகர் விஜய் தனது கட்சித் தொண்டர்கள் அரசுக்கு உதவ வேண்டும் என கூறியதைத் தொடர்ந்து, நிதி வழங்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக CMPRF கணக்கிற்கு வரவு அதிகரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: போடு வெடிய....முடிந்தது கணக்கு....மிரள போகுது கோட்டை! 118 எம்.எல்.ஏ-க்களின் லிஸ்ட் ரெடி...!!!
சமூக வலைதளங்களில் வைரலாகும் ரசீதுகள்
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தவெக தொண்டர்கள் நிதி வழங்கியுள்ளனர். அவர்கள் செலுத்திய தொகைக்கான ரசீதுகளை எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். “அரசின் கடனை அடைக்க உதவி” என்ற வாசகத்துடன் பகிரப்படும் இந்த பதிவுகள் வேகமாக பரவி வருகின்றன.
அரசு அதிகாரிகள் விளக்கம்
ஆனால் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி என்பது இயற்கை பேரிடர்கள், விபத்துகள், மருத்துவ உதவி மற்றும் பொதுநல நிவாரண பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். சட்ட விதிகளின்படி அந்த நிதியை அரசின் பொதுக்கடனை அடைக்க பயன்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
நிதி பயன்பாட்டில் விதிமுறைகள்
தகவலின்படி, CMPRF நிதி செலவினங்களுக்கு தனித்த நடைமுறைகள் உள்ளன. பொதுமக்கள் வழங்கும் உதவித் தொகைகள் அரசின் நலத்திட்ட மற்றும் அவசர நிவாரண நடவடிக்கைகளுக்காக மட்டுமே ஒதுக்கப்படும் என அதிகாரிகள் மீண்டும் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: " சொன்னது ஒன்று... செய்தது ஒன்று " முதல்வர் ஆன முதல் நாளே விஜய்க்கு பேரடி! குமுறும் தமிழக மக்கள்.!!!