கடவுளே... காப்பாத்து! எத்தன்னை தடைகள் வந்தாலும் என் தலைவன் முதல்வர் ஆகணும்.! விஜய் வீட்டு வாசலில் கதறி அழுத தவெக தொண்டரின் வீடியோ!!!



tvk-supporter-emotional-video-pannaiyur

தமிழக அரசியலில் நீடித்து வரும் பரபரப்பான சூழல், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே கடும் ஏமாற்றத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் விஜயின் இல்லம் அருகே இன்று திரண்டிருந்த தொண்டர்களில் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுத காட்சி கவனம் ஈர்த்துள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆட்சியமைப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கட்சித் தொண்டர்கள் பலரும் தொடர்ந்து பனையூரில் கூடிவருகின்றனர். இதனால் அப்பகுதியில் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: கூட்டத்தில் ஒருவனாக நின்ற என்னை பார்த்ததும்... தூத்துக்குடி ஏர்போர்ட்டில் விஜய் செய்த அந்த ஒரு விஷயம்! நெகிழ்ச்சி வீடியோ இதோ...!!!

“என் தலைவன் முதல்வராக வேண்டும்”

தகவலின்படி, விஜயின் இல்ல நுழைவு வாயில் அருகே நின்றிருந்த தொண்டர் ஒருவர் திடீரென கண்ணீர் மல்க பேசத் தொடங்கினார். “எத்தனை தடைகள் வந்தாலும் என் தலைவன் நிச்சயம் முதலமைச்சராக வேண்டும்” என்று அவர் உரக்கக் கூறியதைக் கேட்ட அங்கிருந்த பலரும் அமைதியாக கவனித்தனர்.

அதன்பின், வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்த அவர், “இறைவா, நீ தான் அவரைக் காப்பாற்ற வேண்டும்” என்று உருக்கமாக பேசியதாக கூறப்படுகிறது. அந்தக் காட்சி அங்கிருந்த மற்ற தொண்டர்களையும் நெகிழச் செய்தது.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பின்னரும் ஆட்சியமைப்பதில் நிலவும் சட்ட மற்றும் அரசியல் சிக்கல்கள் காரணமாக, தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தொடர்ந்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், விஜய் ஆதரவாளர் ஒருவர் வீதியிலேயே கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி, தமிழக அரசியல் சூழலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: BREAKING: காலையிலேயே திருச்செந்தூர் முருகன் கோவிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்! அரசியல் பயணத்திற்கு முன் ஆன்மீக வழிபாடு!!!