இதுதான் காரணமா? கோட்டையில் முதல்வர் விஜய் முதல் அமைச்சர்கள் வரை.... அலறி அடித்து அறைகள் மாற்றம்! தலைமைச் செயலகத்தில் நடக்கும் பரபரப்பு பின்னணி..!!!



tn-secretariat-cm-office-vaastu-shift-claim

 

தமிழக தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் அலுவலகம் விரைவில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றத்துக்குப் பின்னணியில் வாஸ்து ஆலோசனை இருப்பதாக கூறப்படும் தகவல், அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஸ்து ஆலோசனையால் அலுவலக மாற்றமா?

தற்போது தலைமைச் செயலகத்தின் இரண்டாவது மாடியில் இயங்கி வரும் முதல்வரின் அறை மற்றும் அவரது செயலாளர்களின் அலுவலகங்கள் வாஸ்து அடிப்படையில் சாதகமாக இல்லை என ஜோதிடர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சமீபத்தில் நடைபெற்ற ஆட்சியர்கள் மாநாட்டின்போது நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியை பார்வையிட்ட முதல்வர், அங்கிருந்து தெரியும் வங்கக்கடல் காட்சியையும் அலுவலக வசதிகளையும் விரும்பியதால் மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிரடி காட்டும் விஜய்! விஜய்யின் "ஆபரேஷன் ப்ளூ ஜெயண்ட்டால் "அலறும் திமுக..... EX அமைச்சர்கள் 5 பேர் கைது? அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்...!!!

அமைச்சர்களிடமும் வாஸ்து ஆலோசனை

முதல்வரின் அலுவலகம் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பல அமைச்சர்களும் தங்களது அலுவலக அறைகள் ராசி, நட்சத்திரம் மற்றும் நடப்பு தசாபுத்திகளுக்கு ஏற்ற வகையில் உள்ளதா என்பதை ஜோதிடர்களிடம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, சில அமைச்சர்கள் தங்களது அலுவலக அறைகளின் திசை மற்றும் உள்கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செலவுகள் குறித்து எழும் கேள்விகள்

இந்த மாற்றங்களுக்கு முதல்வரின் அனுமதியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அதற்கான செலவுகள் அரசு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் அரசு நிர்வாகத்தில், வாஸ்து நம்பிக்கைகள் தொடர்பான மாற்றங்களுக்கு பொதுநிதி பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகளும் சில அதிகாரிகளும் எழுப்பி வருகின்றனர். இருப்பினும், இந்த தகவல்கள் தொடர்பாக அரசுத் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

 

இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்க்கவே இல்லையே! நயினார் நாகேந்திரனுக்கு புதிய பதவி...! தமிழக பாஜகவில் அடுத்த அதிரடி மாற்றம்..!!!