மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
தவெக மாநாடு; ட்ரெண்டிங்கில் மக்கள் தலைவர் அண்ணாமலை...!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவாண்டியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று இலட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து விஜய் ரசிகர்கள் & கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர்.
மதவாதம், ஊழலுக்கு எதிராக குரல்:
கட்சியின் கொள்கை அறிவிப்பு மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய், பாஜக, திமுக கட்சிகளின் மதவாத மற்றும் ஊழல், பிளவுவாத அரசியலை கடுமையாக விமர்சித்து இருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு புறப்பட்டு வந்தவர்களில் 4 பேர் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் பலியாகி இருந்தனர்.
இதையும் படிங்க: அரசியல் விமர்சனத்திற்காக உயிரையே பணயம் வைத்த பாஜக மாநில தலைவர்; தீவிர உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி.!
திரைத்துறையினர் வரவேற்பு
விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு திரைத்துறையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பலரும் மாநாட்டுக்கு முன்னதாகவே தங்களின் நேரடி / மறைமுக ஆதரவை தெரிவித்து இருந்தனர். தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை, மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அங்கு இருந்தாலும், அவர் தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு, அங்குள்ள தமிழர்களிடையே ஆதரவை திரட்டுகிறார்.
பாஜகவினர் அண்ணாமலைக்காக குரல்
இந்நிலையில், அண்ணாமலை நேற்று கேம்பிரிட்ஜில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அயலக தமிழர்களிடையே உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியும் விஜய் மாநாடு நடந்த நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அண்ணாமலையை மக்கள் தலைவர் என பாஜகவினர் வருணித்து, அவர் வர வேண்டும் என எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
நவம்பர் 29 ல் தாயகம் திரும்புகிறார் அண்ணாமலை
நான் சோர்வடைய வில்லை .
— Sanghi Prince 🚩 (@SanghiPrince) October 27, 2024
நவம்பர் 29 இந்தியாவில் இருப்பேன்...இந்தமுறை கிராமங்களை நோக்கி செல்ல உள்ளோம்
-அண்ணாமலை அண்ணன்🔥#EnMannEnMakkal | #Annamalai | #தமிழகவெற்றிக்கழகம் | #TvkVijayMaanadu pic.twitter.com/VFfO0ZYJU3
ஐரோப்பாவில் அண்ணாமலை
Mass Entry by Makkal Thalaivar @annamalai_k in UK🔥🔥🔥 pic.twitter.com/sK5Dopet9E
— Amar Prasad Reddy (@amarprasadreddy) October 27, 2024
அண்ணாமலையை நேரில் காணச் செல்லும் தொண்டர்
I'm on my way to Cambridge to meet Thalaivar #Annamalai 😍 https://t.co/pNIAxKFBUp pic.twitter.com/UEKIASl0Sk
— Murali (@MuraliS27) October 27, 2024
இதையும் படிங்க: ரூ.411 கோடி அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்? அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு.!