
Tm cm aboit exitpolls 2019
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நாடாடளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது.
மே 19 ஆம் தேதியுடன் அனைத்து தொகுதிகளுக்கான தேர்தல்கள் முடிவடைந்தவுடன் பல்வேறு தனியார் ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பினை வெளியிட்டுள்ளனர். இந்த கருத்து கணிப்பு அதிமுக அணியினருக்கு பெரும் சோகத்தை அளித்துள்ளது.
இந்த கருத்து கணிப்புகளில் மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணி தான் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக வெளிவந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அதிமுக மிகவும் குறைந்த இடங்களிலே வெற்றிப்பெறும் என தெரிவித்துள்ளது.
அவ்வாறு அதிமுக அதிகமான இடங்களில் தோல்வியடைந்தால் திமுக கட்சி தமிழகத்தில் மீண்டும் வலிமையடையும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் அதிமுகவினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த கருத்து கணிப்புகளை பற்றி தெரிவிக்கையில், "தமிழகத்தை பொறுத்தவரை வெளிவந்தவை கருத்து கணிப்புகள் அல்ல , கருத்து திணிப்புகள்" என கூறியுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை வெளிவந்தவை கருத்து கணிப்புகள் அல்ல , கருத்து திணிப்புகள்.
— AIADMK (@AIADMKOfficial) May 20, 2019
-மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி.
Advertisement
Advertisement