தவெக அரசுடன் முழுமையான கூட்டணி அல்ல.... அமைச்சரவையிலிருந்து விசிக விலக தயார்....? காலையிலேயே முதல்வர் விஜய்கு அதிர்ச்சி..!!!
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்திருப்பது முழுமையான அரசியல் கூட்டணியைக் குறிக்காது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேவைப்படும் சூழல் ஏற்பட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறவும் தயார் என அவர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் பதவி ஆதரவுக்கான வெகுமதி
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியதாக கூறப்படும் திருமாவளவன், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு தாங்கள் வழங்கிய ஆதரவின் அடிப்படையில்தான் அமைச்சரவைப் பொறுப்பு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விசில் பறக்கப்படும் விசிக கட்சி! கோட்டையை அதிரவைத்த திருமாவளவன் ஒற்றை வார்த்தை.! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...!!!
அதே நேரத்தில், அரசுக்கு ஆதரவு அளித்திருப்பதால் மட்டுமே தவெக-வுடன் முழுமையான அரசியல் கூட்டணியில் இணைந்துவிட்டோம் என்று கருத முடியாது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
புரிந்துணர்வின் அடிப்படையிலான ஆதரவு
தங்களது அரசியல் ஆதரவு ஒரு குறிப்பிட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் வழங்கப்பட்டதாகவும், அது நிரந்தரமான ஏற்பாடு அல்ல என்றும் திருமாவளவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அரசியல் சூழ்நிலைகள் மாறினால் அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவையும் எடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதம்
புதிய அரசு பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே கூட்டணி உறவுகள் மற்றும் அமைச்சரவைப் பங்கீடு தொடர்பாக இத்தகைய கருத்துகள் வெளியாகியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ஆளும் அணிக்குள் எதிர்கால அரசியல் சமன்பாடுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
திருமாவளவனின் இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், கூட்டணிக் கட்சிகளின் அடுத்தகட்ட நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: இது சரிப்பட்டு வராது.... வேலையை காட்ட வேண்டியதுதான்! திமுக போட்ட மாஸ்டர் பிளான்... வலையில் சிக்குமா வன்னி அரசு, கௌதம சன்னா...!!!