மகளிர் உரிமைத்தொகை.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.!

மகளிர் உரிமைத்தொகை.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.!


the-tamil-nadu-government-has-announced-relaxations-in

முன்னாள் முதலமைச்சர்,அறிஞர் அண்ணாதுரையின் பிறந்த நாளான கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களில் முக்கிய திட்டமாக கருதப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

Tn government

இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு இதுவரையில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன் பின்னர் நடப்பு மாதம் இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு மனு வழங்கிய 7.53 லட்சம் பேருக்கும் 2ம் கட்டமாக மகளிர் உரிமை தொகையை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேலும் சில தளர்வுகள் வழங்கப்படவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பாக, இந்த திட்டத்தில் பயனாளிகளின் தகுதிகளில் மேலும் சில தளர்வுகள் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.

Tn government

அதன் மூலமாக இந்த திட்டத்தில் இன்னும் அதிக பயனர்களை இணைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலமாக தகுதியான பெரும்பான்மையான மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.