நெருக்கடிக்கு பணிந்த அமைச்சர்: ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி ஆணையர் சஸ்பெண்டு..!

நெருக்கடிக்கு பணிந்த அமைச்சர்: ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி ஆணையர் சஸ்பெண்டு..!



The municipal commissioner who served the notice to the employees was suspended

தெலுங்கானா மாநிலம், பெல்லம்பள்ளி நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் சமீபத்தில் நடைபெற்ற அமைச்சர் கே.டி. ராம  ராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அமைச்சரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்காத நகராட்சி ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு  நகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையரை தெலங்கானா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

தெலங்கானாவில் உள்ள பெல்லம்பள்ளி நகராட்சியில் ஆணையராக பணிபுரிபவர் ஜி.கங்காதர். இவர் கடந்த 24 ஆம் தேதி பெல்லம்பள்ளி நகரில் நடைபெற்ற அந்த மாநில அமைச்சர் கே.டி. ராம ராவின் பிறந்தநாள்  கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாத, நகராட்சி பணியாளர்களுக்கு அதற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், இதனை கண்ட 24 மணி நேரத்திற்குகள் இதற்கு நீங்கள் பதிலளிக்கலாம், இல்லையெனில் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் நகராட்சி ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக தெலுங்கானா அரசை தெலுங்கானா மாநில பா.ஜ.க கண்டித்தது. ஜூலை 24 ஆம் தேதியன்று இளவரசர் கே.டி.ஆரின் பிறந்தநாள் விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என்பதை விளக்குமாறு  ஊழியர்களுக்கு பெல்லம்பள்ளி நகராட்சி மெமோ அனுப்பியுள்ளது. கடைசியாக எங்களுக்கு தெரிந்தது. தெலங்கானாவில் இன்னும் மக்களுக்கு சேவை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கிறதா அல்லது அது முடியாட்சியாக மாறியிருக்கிறதா என்று பா.ஜ.க ஐ.டி விங் பிரிவு தலைவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

நகராட்சி ஆணையர் கங்காதர், நகராட்சி ஊழியர்களுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, பெல்லம்பள்ளி நகராட்சி ஆணையர் ஜி.கங்காதரை தெலங்கானா அரசு சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்துள்ளது. நகராட்சி ஆணையர் கங்காதரின் இந்த நடவடிக்கை அபத்தமானது என்று அமைச்சர் கே.டி. ராம ராவ் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.