"கலைஞர் கருத்தை அமோதித்ததால் கல்லடி பட்டேன்..." திமுக-வில் இருந்து விலகியது ஏன்.? மனம் திறந்த குஷ்பூ.!!



stalin-supports-me-but-cannot-work-with-other-dmk-membe

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ தற்போது தீவிர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார். மேலும் இவர் திமுகவில் இணைந்து பணியாற்றி வந்த நிலையில் அந்தக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இது அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் நடிகை குஷ்பூ, பாஜகவில் இணைந்ததற்கு பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததற்கான காரணத்தை குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின் பற்றிய கலைஞரின் கருத்து

திமுகவிலிருந்து விலகியது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி பேட்டியில் பேசிய குஷ்பூ, திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவாரா.? என்பது குறித்து திமுக பொது குழு தான் முடிவு செய்யும் என திமுகவின் அப்போதைய தலைவர் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருந்தார். என்னுடைய தலைவரான கலைஞரின் கருத்தையே நானும் கூறினேன். இது திமுகவின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை எனக் கூறினார். ஸ்டாலின் அடுத்த தலைவராக வருவதை திமுக பொதுக் குழு தான் முடிவு செய்யும் என்ற கலைஞரின் கருத்தை கூறியதற்கு என் வீட்டின் மீது திமுக தொண்டர்கள் கல்லெறிந்தார்கள் எனவும் தெரிவித்தார்.

tamilnadu

முதல்வர் ஸ்டாலினுடன் எந்த மோதலும் கிடையாது

மேலும் தொடர்ந்து பேசிய நடிகை குஷ்பூ, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சிறந்த பண்பாளர் என குறிப்பிட்டார். திமுக மேடையில் முதல் முறையாக உரையாற்றிய போது ஜெய்ஹிந்த் என கூறி எனது உரையை நிறைவு செய்தேன். அப்போது திமுகவில் அமைச்சராக இருந்த நபர் ஜெய்ஹிந்த் என கூறி உரையை முடிக்க கூடாது என தெரிவித்தார். மேலும் மேடையில் எப்படி பேசுவது என்று தெரியாதா.? எனவும் கூறினார். அப்போது இதனை கவனித்துக் கொண்டிருந்த ஸ்டாலின், அவர் முதல் முறையாக மேடையில் பேசுகிறார். எந்தவித குறிப்பும் இல்லாமல் முக்கால் மணி நேரம் உரையாற்றியிருக்கிறார். அதை பாராட்டுங்கள். அவர் தன்னுடைய குறைகளை திருத்திக் கொள்வார் என எனக்கு ஆதரவாக பேசினார். எப்போதுமே எனக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்... "முதல்வரை தீர்மானிக்கும் விஜய்..." அரசியல் விமர்சகர்கள் பரபரப்பு கனிப்பு.!!

நிர்பந்தத்தால் வெளியேறினேன்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வரவேண்டும் என நான் கூறியிருக்க வேண்டும் என்று திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் என்னை நிர்ப்பந்தித்தனர். என்னால் அப்படி பேச முடியாது. எனது சிந்தனையில் இருப்பதைத்தான் நான் பேச முடியும். என்னுடைய கருத்தில் உறுதியாக இருந்ததற்கு திமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.. அப்படி இருந்தும் நீண்ட காலம் திமுகவில் தொடர்ந்தேன். என்னால் திமுகவில் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாத சூழலில் தான் கட்சியை விட்டு வெளியேறினேன். இது கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் தெரியும் என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: "டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; ஆட்சில பங்கு கிடையாது.." இபிஎஸ் கருத்தால் புதிய சர்ச்சை.!!