BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அட.. பிக்பாஸ் ஷிவானிதானா இது.! என்னவொரு சேஞ்ச்.! லேட்டஸ்ட் புகைப்படங்களால் சர்பிரைஸில் ரசிகர்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை ஷிவானி. தொடர்ந்து அவர் விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைரோஜா போன்ற தொடர்களில் கதாநாயகியாக நடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி
ஆனால் சில காரணங்களால் அவர் பாதியிலேயே அந்த தொடர்களிலிருந்து விலகினார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி காதல் சர்ச்சையில் சிக்கி மேலும் பிரபலமானார். நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்தது.
இதையும் படிங்க: வாவ்.. செம கியூட் ஜோடி.! நடிகை ஜனனி ஐயருக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு.! மாப்பிள்ளை யாருனு பார்த்தீங்களா!!
சேலையில் அசத்தும் ஷிவானி
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். ஆனால் தற்போது முற்றிலும் மாறுபட்டு புடவையில் சிம்பிளான ஹோம்லி லுக்கில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஷிவானிதானா இது! என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்.! தக்க விளக்கமளித்த குட் பேட் அக்லி படக்குழு.!