குஜராத்தில் வெற்றி பெற மோடியின் பெயர் போதாதா?... காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் விமர்சனம்...!!

குஜராத்தில் வெற்றி பெற மோடியின் பெயர் போதாதா?... காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் விமர்சனம்...!!


Senior Congress leader Ashok Khelat was nominated by Modi to win Gujarat

பாரதிய ஜனதா கட்சி பயந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் கூறியுள்ளார். எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற மோடி பெயர் போதாதா, அவர் அடிக்கடி பிரச்சாரத்துக்கு வரவேண்டிய அவசியம் என்ன, என கேள்வி எழுப்பி உள்ளார்.

குஜராத்தில் கடந்த 27 வருடங்களாக பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. எதிர்வரும் அந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க. குஜராத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அங்கு பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நவம்பர் 27 முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை மொத்தம் 14 கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட உள்ளார் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குஜராத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி சென்று பிரச்சாரம் செய்து வருவதை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அசோக் கெலாட் கூறியிருப்பதாவது:- 

எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற மோடியின் பெயர் போதாதா என்றும், பிரதமர் மோடியின் பெயர் போதுமானதாக இருக்கும் போது, குஜராத்துக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக மீண்டும் மீண்டும் வர வேண்டிய அவசியம் என்ன, காரணம் பா.ஜ.க. இப்போது பயந்து விட்டது. குஜராத் சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தால், அதன் பின்னணியில் வேலையின்மை மற்றும் அதிக பணவீக்கம் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட  சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1-ஆம் தேதி மற்றும் 5-ஆம் தேதி என மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.