திமுக தலைவராக பதவி ஏற்கப் போகும் ஸ்டாலின்!. இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் ஸ்டாலின்!.

திமுக தலைவராக பதவி ஏற்கப் போகும் ஸ்டாலின்!. இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் ஸ்டாலின்!.


second DMK Leader stalin trending hashtag


திமுக தலைவர் கருணாநிதி சிறுநீர் தொற்று மற்றும் வயது முதிர்வின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சமீபத்தில் காலமானார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் பதவிக்கு மு க ஸ்டாலின் மற்றும்  பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 இவர்களுக்கு எதிராக வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால்அவர்கள் போட்டியின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணியளவில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

MK Stalin

இந்நிலையில் இன்று காலை முதல் திமுக குறித்த கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து, திமுகவின் 2வது தலைவராகப்போகும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் #DMKThalaivarStalin என்ற ஹேஷ்டாகை பயன்படுத்தி இணையதளவாசிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஹேஷ்டாக் ட்விட்டர் இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.