TVK விஜய் குறித்த கேள்வி.. பின் வாங்கிய விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர்.! 



sachandra sekar about tvk vijays place on election 2026

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. வழக்கத்திற்கு மாறாக இந்த தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி நாடு முழுவதும் இது பெரும் பேசு பொருளானது. 

இதற்கு புதிய வாக்காளர்களை ஈர்த்த விஜயின் தவெக கட்சிதான் காரணம் என்று கட்சிக்காரர்கள் சமூக வலைதளங்களில் பேசியும் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தும் வருகின்றனர். 

இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பங்கேற்ற விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரிடம், '2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரிக்க விஜயின் தவெக தான் காரணம் என்று கூறுகின்றனர். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.?" என்று கேட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "தேர்தலுக்கு பின் அவதிப்படப்போகும் விஜய்.?!"

TVK Vijay

அதற்கு அவர். "தமிழக தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பது மகிழ்ச்சியான செய்தி தான்/ ஆனால். இந்த கூட்டத்தில் அரசியல் குறித்து பேச வேண்டாம்" என்று அவர் பின்வாங்கியுள்ளார். 

ஏற்கனவே விஜயின் அனுமதியே பெறாமல் அவருக்காக கட்சி ஆரம்பிக்கச் சென்ற எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் விஜய் இருவருக்கும் மன கசப்பு இருந்து வரும் நிலையில். விஜய் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர் மறுப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதையும் படிங்க: தளபதி விஜய் முதல்வர்..! வெளியான தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்! சர்ச்சையை கிளப்பிய போஸ்ட்....!!!