தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும்..! டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்..!

தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும்..! டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்..!



ramdoss about tamil language

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான இருப்பவர் ராமதாஸ். இவர் மருத்துவராக தனது பயணத்தை தொடங்கி, இன்று தமிழகத்தில் தவிர்க்க இயலாத அரசியல் தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார். இவர் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

இந்நிலையில், இதுகுறித்த அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையில் உள்ள பாடங்களில் தமிழைக் கட்டாயம் ஆக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டு, 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில், இயற்றப்பட்ட சட்டம் இன்னும் நடைமுறைக்கு வராதது வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. 

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் வழங்கும் தமிழ்நாட்டு அரசு  ஆங்கிலம், அறிவியல் போன்ற பாடங்களின் பெயர்கள் அப்படியே அச்சிட்டு, தமிழை மட்டும்   மொழிப்பாடம் என்று குறிப்பிட்டுள்ளதை பார்க்கும் போது சகிக்கவில்லை. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இப்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்குச் சென்றுள்ளது. 

 இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தின் நியாயங்களையும், தேவைகளையும் நீதிபதிகளுக்கு உணர்த்தும் வகையில் வாதிடக் கூடிய திறமையான ஒரு சட்ட வல்லுனரை தமிழ்நாட்டு அரசு நியமிக்க வேண்டும். 

மேலும், இந்த உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் வெற்றி பெற்று நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.