பாஜகவில் சேருகிறாரா ரஜினிகாந்த்? ரஜினியின் ஓப்பன் டாக்! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

பாஜகவில் சேருகிறாரா ரஜினிகாந்த்? ரஜினியின் ஓப்பன் டாக்!

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன  புதிய அலுவலகத்தில், இயக்குனர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையை நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் திறந்துவைத்தனர். 

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் எனக்கும் காவிக்கும் செட் ஆகாது. வள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்ட மாட்டேன். மேலும், என்னை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
பாஜகவில் சேருவதற்கு கட்சியில் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என கூறினார். 

rajini க்கான பட முடிவு

தொடர்ந்து பேசிய அவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். பேசவேண்டிய விசயத்தை விட்டுவிட்டு திருவள்ளுவர் விசயத்தை சர்ச்சையாக்கியது அற்பத்தனமானது. மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளபோது திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது என தெரிவித்தார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo