வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
இரட்டை இலைக்கு எதிராகவே நிற்கிறீர்களா.? பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்..
இந்தியா முழுவதும் 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பொதுவாக இரண்டாம் கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெறும். ஆனால் இம்முறை முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பல கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், பாஜக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் நாலு கட்சிகள் போட்டியிடுகின்றன. மேலும் பாமக 10 தொகுதிகள், தமிழக மாநில கட்சிக்கு 3 தொகுதிகள், அமமுக 2 தொகுதிகள் என ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் 1 தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய அவர், "இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு சட்ட போராட்டம் நடத்துவதாகவும், பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகவும்" பேசி இருந்தார். இதனை அடுத்து நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ராமாநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நின்று வெற்றி பெறப் போவதாக அறிவித்துள்ளார். இதன்பின்னர் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்த ஓபிஎஸ்யிடம் பத்திரிகையாளர் ஒருவர் இரட்டை இலைக்கு எதிராகவே போட்டியிடப் போகிறீர்களா என்று கேட்டார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்து பதில் பேச முடியாமல் வாயடைத்து போனார்.