மீண்டும் அதிமுகவில் இணைந்த மைத்ரேயன்; உற்சாகத்தில் கட்சித்தொண்டர்கள்.!
அதிமுகவில் மிகமுக்கிய புள்ளியாக விளங்கி வந்த மைத்ரேயன், அதிமுகவின் பிளவுக்கு பின்னர் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அணியில் இடம்பெற்று இருந்தார்.
அதனைத்தொடர்ந்து, அவர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சென்ற நிலையில், கடந்த 2022 ம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
கடந்த 2023 ல் பாஜகவில் இணைந்த அவருக்கு உரிய மரியாதை மற்றும் பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை எந்த விதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க: நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பு... விடுதலை ஆவாரா அரவிந்த் கெஜ்ரிவால்.? சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு.!!
மைத்ரேயன் - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு
இதனால் மைத்ரேயன் பாஜக தலைமையிடம் முறையிட்டும் பலனில்லை என கூறப்படும் நிலையில், விரக்தியில் இருந்து வந்தவர், இன்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு சென்று, அவரை நேரில் சந்தித்தார்.
விரைவில் அவர் அதிமுகவில் இணையக்கூடும் என்ற பேச்சுவார்த்தை காலை முதலாக இருந்து வந்த நிலையில், இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இதனால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் விஜய்யின் தவெக மாநாடு தேதியில் மாற்றம்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.!!