இப்படி ஒரு பிளானா? இடைத்தேர்தலில் பாமக விலகலுக்கு பின்னால் தவெக! ஜான் ஆரோக்கியசாமியை வைத்து CM விஜய் போட்ட ஸ்கெட்ச்... தலை ஆட்டிய அன்புமணி! அம்பலமான அரசியல் உண்மை...!!!



pmk-neutrality-tvk-john-arokiasamy-talks

தமிழக அரசியல் களத்தில் பாமகவின் இடைத்தேர்தல் நிலைப்பாடு கவனம் பெற்றுள்ளது. எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்க பாமக எடுத்த முடிவின் பின்னணியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி நடத்திய பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸுடன் நேரடியாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அன்புமணியுடன் நேரடி பேச்சுவார்த்தை

தகவலின்படி, ஜான் ஆரோக்கியசாமி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அன்புமணி குடும்பத்தின் மீது மரியாதை இருப்பதாகவும், குறிப்பாக சௌமியா அன்புமணியை அமைச்சரவையில் இடம்பெறச் செய்யும் விருப்பம் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்...! இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை...! பாமக தலைவர் அன்புமணி ராமாதாஸ் அதிரடி அறிவிப்பு..! அதிமுக கூட்டணிக்கு விழுந்த பேரிடி...!!!

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்த பேச்சு

மேலும், தற்போதைய தேர்தல் களத்தில் தவெகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காமல், தேர்தலுக்குப் பிறகு அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை திறந்துவைக்குமாறு பாமக தரப்பிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் தொடர்ச்சியாகவே இடைத்தேர்தலில் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகிக்கும் முடிவை பாமக எடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாமக எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என அன்புமணி அறிவித்திருப்பதும் இதற்கு பின்னணியாக பார்க்கப்படுகிறது.

கூட்டணி தொடர்பான எதிர்பார்ப்பு

இதற்கிடையில், தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பாமக இடம்பெறுவது குறித்த கேள்விகளுக்கு அன்புமணி ராமதாஸ் முன்பும் சூசகமாக பதிலளித்திருந்தார். மேலும், விஜய் அரசின் நடவடிக்கைகளுக்கு பாமக ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதனால், எதிர்கால அரசியல் நகர்வுகளில் இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு எந்த திசையில் செல்கிறது என்பது கவனிக்கப்படும் ஒன்றாகியுள்ளது.

 

இதையும் படிங்க: ராமதாஸ் போட்ட ஒரு ஃபோன் கால்....! சட்டப்பேரவையே தெறிக்கவிட்ட சௌமியா அன்புமணி.... முதல்வர் விஜய்யை சிந்திக்க வைத்த அந்த தருணம்!!!