ஊழல்வாதிகளை ஒன்றுசேர்த்து பாஜக + அதிமுக கூட்டணி: முதல்வர் கடும் விமர்சனம்.! 



nda-is-a-coalition-of-corruption-says-tamil-nadu-cm-mk

தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் ஹீரோ. ஆனால், அதிமுக+பாஜக கூட்டணிக்கு மக்கள் ஜீரோவை பரிசாக திருப்பித் தருவார்கள் என முதல்வர் பேசினார்.

ஊழல் கறை படித்தவர்கள்:

சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே சார்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) கடுமையாக விமர்சித்தார். “மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் வழங்கியது ஜீரோ மட்டுமே. அதே ஜீரோவை வரும் தேர்தலில் மக்கள் என்டிஏ கூட்டணிக்கு திருப்பித் தர உள்ளனர். ஊழல் கறை படிந்தவர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு, பொய்களை பரப்பி தேர்தலை சந்திக்கிறார்கள்” என அவர் கூறினார்.

இதையும் படிங்க: MK Stalin: காங்கிரசின் மறைமுக கோரிக்கையில் விழுந்த மண்.. அதிரடியாக கர்ஜித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.!

TN politics

வளர்ச்சியில் தமிழ்நாடு:

தொடர்ந்து பேசிய முதல்வர், “தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 45 சதவீத ஆதரவுடன் முன்னிலையில் உள்ளது. இரண்டாம் இடத்துக்கும் எங்களுக்கும் இடையே 12 சதவீத வித்தியாசம் உள்ளது. அரசியலில் 3 சதவீத இடைவெளியே பெரும் வெற்றிக்கு போதுமானது. 12 சதவீதம் என்றால் அது மிகப்பெரிய மக்கள் ஆதரவு. இருந்தாலும், இந்த கணிப்பு எங்களை மெத்தனமாக அல்ல, மேலும் உற்சாகமாக உழைக்கத் தூண்டுகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு மீண்டும் எட்டியுள்ளது. மாநிலத்தின் ஜிஎஸ்டிபி 17.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தனிநபர் வருமானம் 3.58 லட்சம் ரூபாய். இது தேசிய சராசரியை விட 1.74 மடங்கு அதிகம்.

TN politics

முன்னணி மாநிலம்:

தமிழ்நாட்டில் 98.3 சதவீத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன. NIRF தரவரிசையில் நாட்டின் முதல் 100 கல்லூரிகளில் 33 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. முதல் 50 பல்கலைக்கழகங்களில் 10 தமிழ்நாட்டில்தான் உள்ளன. நிதி ஆயோக் வெளியிட்ட SDG குறியீட்டில் 78 புள்ளிகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் விளைவாக 65-க்கும் மேற்பட்ட ஒன்றிய அரசு விருதுகள் தமிழ்நாட்டை தேடி வந்துள்ளன. நிதிப் பகிர்வு, வரிப் பகிர்வு, ரயில்வே மற்றும் சிறப்பு திட்டங்கள் என அனைத்திலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஆளுநர் மூலம் நிர்வாக இடையூறுகள், அவதூறு பிரச்சாரங்கள் என அரசியல் சதி நடக்கிறது. வெறுப்பையும் பொய்களையும் அரசியல் ஆயுதமாக்கும் பாஜக அரசியல் தமிழ்நாட்டில் ஒருபோதும் வெற்றி பெறாது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தமிழ்நாட்டை தொடர்ந்து இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்குவோம்” என கூறினார்.