அரசியல்

மகளின் திருமணத்திற்காக பரோலில் இருந்து வெளிவந்த நளினி- வீடியோ உள்ளே

Summary:

nalini-parol

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நளினி தனது மகள் ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய தன்னை 6 மாதம் பரோலில் விடுவிக்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நளினியின் மனு குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், நளினியை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது.அதுமட்டுமின்றி அரசியல்வாதிகள், இயக்கவாதிகளை சந்தித்து பேட்டியளிக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இன்று காலை பரோலில் வெளி வந்த நளினி வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்காராயர் வீட்டில் தங்குகிறார்.


Advertisement