முதல் ஆளாக மு.க. ஸ்டாலின் விடுத்த அழைப்பு.! நாடாளுமன்ற தேர்தலுக்கான வலியுறுத்தல்.!
சமீப காலமாக அரசியல் கட்சிகள் பலவும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பணியாற்ற துவங்கியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தேர்தல் கூட்டணி குறித்த அரசியல் பயங்கரமாக நடந்தேறி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு முதல் ஆளாக அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும்.
தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் இது நான் தனிப்பட்ட முறையில் கொடுத்த அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த முறை நாம் கைப்பற்ற தவறிய ஒற்றை சீட்டையும் இந்த முறை முழுமையாக கைப்பற்றி விட வேண்டும்.
கடந்த தேர்தலை விட கூடுதலான உழைப்பை நாம் கொடுக்க வேண்டும். நமது வாக்கு வங்கி வெற்றி விகிதம் கடந்த தேர்தலை விட அதிகப்படியாக இருக்க வேண்டும்.
அன்பு உடன்பிறப்புகளே.! உங்களது ஈடில்லா உழைப்பினால், 40 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்யுங்கள்." என்று தெரிவித்துள்ளார்.