குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது?.. அமைச்சர் பி.டி.ஆர் அதிரடி பதில்.. கொண்டாட்டத்தில் இல்லத்தரசிகள்.!Minister PDR answer

தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது, திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட திமுக மாநாட்டில் அக்கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன்படி, திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார். 

தற்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது வரை குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லை. அரசின் சார்பில் விரைவில் அந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது. 

Minister PDR

இந்த நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில், "குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பான களஆய்வு பணிகள் 85 % நடைபெற்று முடிந்துவிட்டன. 

ரூ.1000 நிதிஉதவி வழங்குவது தொடர்பான இறுதி முடிவுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆலோசித்து எடுப்பார். புதிய ஆண்டு பிறந்து நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம்" என கூறினார். இந்த தகவல் இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.