மாரி செல்வராஜின் 'வாழை' பட சிறுவனின் +2 mark வைரல்.! நடிப்பிலும் படிப்பிலும் அசத்திய பொன்வேல்.!
BREAKING : எதிர்பார்பில் ஏமாற்றம் தான்.... விஜய்க்கு இன்று முதல்வர் பதவிப்பிரமாணம் இல்லை! சென்னையே பரபரப்பில்...!!!
தமிழக அரசியல் வட்டாரத்தில் நடிகர் விஜயைச் சுற்றிய புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து மெரினாவில் தவெகவினர் போராட்டம் நடத்தலாம் என்ற தகவலும் வெளியாகியதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரைச் சாலை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மெரினாவில் அதிகரித்த போலீஸ் கண்காணிப்பு
தகவலின்படி, சமூக வலைதளங்களில் போராட்டம் தொடர்பான பதிவுகள் பரவியதையடுத்து போலீஸார் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். குறிப்பாக மெரினா, லைட்ஹவுஸ், அண்ணா சாலை இணைப்பு பகுதிகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சில மணி நேரமாக பதற்றமான சூழல் காணப்படுகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் தீவிரமாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமூக வலைதள தகவலால் பரபரப்பு
விஜய் தொடர்பான அரசியல் தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. குறிப்பாக ஆட்சி அமைப்பது குறித்த விவாதங்கள் மற்றும் ஆதரவு பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
ஆனால் தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், வதந்திகள் பரவாமல் இருக்க போலீஸார் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: போடு வெடிய....முடிந்தது கணக்கு....மிரள போகுது கோட்டை! 118 எம்.எல்.ஏ-க்களின் லிஸ்ட் ரெடி...!!!