துண்டு போட்டாங்க... போஸ் கொடுத்தோம் அவ்வளவு தான்! மீண்டும் அதிமுகவில் குழுவோடு ஐக்கியம்! செந்தில் பாலாஜி தலையில் விழுந்த இடி!



karur-political-switch-drama-2026-election

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், மாநில அரசியலில் கூட்டணி அமைப்பு, உறுப்பினர் சேர்க்கை முதலானவை வேகமெடுத்துள்ளன. அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை உயர்த்தும் நோக்கில் எதிர்கட்சியினரை கவரும் முயற்சியில் தீவிரமடைந்துள்ளன.

கரூரில் செந்தில் பாலாஜியின் தீவிர அரசியல் நடவடிக்கை

குறிப்பாக திமுக ஓரணியில் செந்தில் பாலாஜி முக்கிய பங்கு வகித்து மாறுக் கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக கரூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலரை திமுகவில் இணைத்ததாக அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்க்கல.... விஜய்க்கு அடித்த ஜாக்பட்! தவெகவில் இணைந்த முக்கிய பிரபலம்! செம குஷியில் விஜய்...

அதிமுக வெளியிட்ட மாற்றுப் புகைப்படம்

எனினும், அவர்கள் உதவி செய்வதாக அழைத்துச் சென்று திமுக துண்டு போட்டதாகவும் உண்மையில் தாங்கள் அதிமுகவிலேயே இருப்பதாகவும் புதிய புகைப்படத்தை அதிமுக வெளியிட்டது. இதனால் இரண்டு தரப்பும் ஒரே நபர்களை தங்களது ஆதரவாளர்களாக விளம்பரப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியல் சூடேற்றி சேர்க்கை

இந்த நிகழ்வு கரூரில் அரசியல் சூட்டைக் கிளப்பியுள்ளதோடு, செந்தில் பாலாஜி மற்றும் விஜயபாஸ்கர் இடையேயான போட்டியை வெளிப்படையாக காட்டுகிறது. தேர்தலை நோக்கி இப்படிப் பட்ட அதிரடி அரசியல் நிகழ்வுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் எந்த திசையில் நகரும் என்பதையே தற்போது அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக கவனித்து வருகின்றன.

 

இதையும் படிங்க: Breaking: உச்சக்கட்ட அதிர்ச்சியில் விஜய் மற்றும் இபிஎஸ்! 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்! செம குஷியில் ஸ்டாலின்...