அதிமுக வெற்றி பெற வேண்டி கஞ்சா கருப்பு தீச்சட்டி எடுத்து வேண்டுதல்.. வைரல் புகைப்படங்கள்!Kanja karuppu pray for ADMK victory

18வது மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Admk

அதிலும் குறிப்பாக வேட்பாளர்கள் பொது மக்களை கவரும் வகையில் வித்தியாசமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன்படி டீக்கடையில் டீ போடுவது, வடை சுடுவது, தோசை சுடுவது, விவசாயம் செய்வது போன்ற பல நகைச்சுவை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு வரும் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் சமூக வெற்றி பெற வேண்டி சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னி சட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.

Admk

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி ஐயாவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது மிகப்பெரிய விஷயம். வரும் எம்பி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் சமூக வெற்றி பெற வேண்டுமென சமயபுரம் மாரியம்மன் இடம் வேண்டி குடும்பத்துடன் அக்னி சட்டி பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்திய உள்ளேன் என கூறியுள்ளார்.