இந்த தேர்தல் டி20 போட்டி மாதிரி உள்ளது.! கிரிக்கெட் ஆர்வலர்களே... என் மனைவிக்கு ஒட்டு போட்டுருங்க.. வாக்கு சேகரிப்பில் ஜடேஜா..!

இந்த தேர்தல் டி20 போட்டி மாதிரி உள்ளது.! கிரிக்கெட் ஆர்வலர்களே... என் மனைவிக்கு ஒட்டு போட்டுருங்க.. வாக்கு சேகரிப்பில் ஜடேஜா..!


jadeja ask vote for his wife

குஜராத் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்ற தோ்தல் நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால் இந்த தேர்தல் நாடுமுழுவதும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் தொடா்ந்து 6-முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலிலேயே ரிவாபாவின் பெயரும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ரிவாபா அப்பகுதியில் உள்ள கிராமங்களில் கவனம் செலுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். 


இந்தநிலையில், ஜாம்நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தனது மனைவிக்கு வாக்களிக்குமாறு அத்தொகுதி மக்களிடம் பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆதரவு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், இந்த தேர்தல் டி20 போட்டி போல் உள்ளது. என் மனைவி பாஜக வேட்பாளராக அரசியலில் அறிமுகமாகிறார். நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். ஜாம்நகர் மக்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளிக்க திரளாக வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.