மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
கட்சியின் விதியை மீறி செயல்பட்ட அதிமுக நிர்வாகி; அதிரடி காட்டிய தலைமை.. பறந்தது உத்தரவு.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 05ம் தேதி நடைபெறுகிறது. பிப்.08 ம் தேதி முடிவு வெளியாகிறது. காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி, இடைத்தேர்தலில் திமுக வசம் சென்றது.
இதனால் திமுக வேட்பாளராக சந்திர குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக களமிறங்குகிறார். வேட்புமனுத்தாக்கல் நிறைவுபெற்றுள்ளது.
சுயேட்சையாக களமிறக்கும்
இடைத்தேர்தல் என்பதால் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் புறக்கணிக்கப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவர், சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு வாங்கினார்.
இதையும் படிங்க: நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு தலைகுனி - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.!
இந்த தகவலை அறிந்த அதிமுக தலைமை, முருகனை கட்சியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டு இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஓ.பி.எஸ் அதிமுக அணியில் இருந்தவர், மீண்டும் அதிமுகவுக்கு வந்தார்.
இதனிடையே, அவர் கட்சியின் தலைமை அறிவிப்பை மீறி செயல்பட்ட காரணத்தால், கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக தெய்வசக்தி கொண்ட கட்சி - எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்.!