அதிமுக தெய்வசக்தி கொண்ட கட்சி - எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்.!



AIADMK Edapapdi Palanisamy Latest Speech 


சென்னையில் உள்ள கண்ணகி நகர் பகுதியில், அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என பேசினார். 

ஆட்சியர் அவமதிப்பு

இதுதொடர்பாக அவர் பொதுக்கூட்ட மேடையில் பேசுகையில், "அதிமுக என்ற இயக்கம் தெய்வசக்தி கொண்டது. இதனால் எந்த ஒரு சக்தியாலும் அதிமுகவை அழிக்க முடியாது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டிக்கு அவரின் மகனை அழைத்துச் சென்று, ஆட்சியரை அவமதித்து இருக்கிறார். 

வெளிச்சம் போட்டு காட்டுவோம்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவி கூறிய சார் யார் ? என கேட்டால், திமுகவினர் துடிக்கின்றனர். குற்றம் உள்ள நெஞ்சம் துடிக்கிறது. குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும், அந்த சார் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் நோக்கம். திமுகவினர் பயம் கொள்ள காரணம் என்ன? பெரும்புள்ளி இந்த விஷயத்தில் சிக்கி இருக்கிறது. 

இதையும் படிங்க: #Breaking: பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக - அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்.!!

மக்களின் வரிப்பணம் என்ன ஆனது?

அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அதிமுக ஆட்சி மலர்ந்தும், அந்த பெரும்புள்ளி யார்? என வெளிச்சம்போட்டு காண்பிக்கப்படும். மாநில அரசின் வருவாய் ரூ.1 இலட்சம் கோடியை தாண்டியும், புதிய திட்டங்கள் இல்லை. மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு; சட்டப்பேரவைக்கு வருகை தரவில்லை..!