எடப்பாடி பழனிசாமி சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஒன்னா சேர்ந்து போட்ட திட்டமா.?..2 நாட்கள் பொறுத்திருங்கள்....!!!
தமிழக அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து அதிமுக வட்டாரத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை நேரில் சந்தித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில், தமிழக அரசியலில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட முடிவுகள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய மாற்றம்.... நாளை காலை 11:30 மணிக்கு விஜய்க்கு பிரம்மாண்டாமாக நேரு ஸ்டேடியத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா!!!
தவெக ஆதரவு குறித்து மாறுபட்ட கருத்துகள்
தகவலின்படி, கூட்டத்தில் சில எம்எல்ஏக்கள் தவெக தரப்பில் கோரிக்கை வந்தால் ஆதரவு அளிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்கத் தயாராக இருப்பதாக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலளித்த பழனிசாமி, “இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள், நல்லதே நடக்கும்” என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
9ம் தேதி வரை புதுச்சேரியில் தங்க உத்தரவு
ஆலோசனை முடிந்த பிறகு சென்னை திரும்பிய அதிமுக எம்எல்ஏக்கள் வரும் 9ம் தேதி வரை புதுச்சேரியிலேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஏற்காடு தொகுதி எம்எல்ஏ உஷாராணி, “டிவி பார்த்து நேரம் கழிக்கிறோம். புதுச்சேரி நன்றாக இருக்கிறது. எங்களிடம் எந்த கையெழுத்தும் வாங்கப்படவில்லை” என்று தெரிவித்தார். மறுபுறம், புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், கூட்ட விவரங்களை சீனியர் நிர்வாகிகளே விளக்குவார்கள் என கூறினார்.
இதையும் படிங்க: ரகசிய டீல்....விஜய்க்கு ஆளுநர் கொடுத்த சீக்ரெட் பிராமிஸ்..! அந்த ஒரு வார்த்தையால் நிம்மதியாக கிளம்பிய விஜய்!!!