இன்று மாலை 6 மணிக்கு முடிவுக்கு வருகிறது பிரச்சாரம்!! தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு!!election commision order

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலிலும் அணைத்து கட்சி வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும், தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

election commission

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்வதால் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பிரசாரம் ஓய்ந்தபின் வெளியூரைச் சேர்ந்தவர்கள் விடுதிகளில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிகள், மண்டபங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளார்களா என்பதைக் கண்காணிக்க காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரி அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் சோதனையில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால், இரண்டு நாட்களுக்கு வாகனச் சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது.