அன்று துலாபாரம் இன்று தங்க கிரீடம் காணிக்கை ! பலமான வேண்டுதல் வைத்த துர்கா ஸ்டாலின்!!

அன்று துலாபாரம் இன்று தங்க கிரீடம் காணிக்கை ! பலமான வேண்டுதல் வைத்த துர்கா ஸ்டாலின்!!



durga-stalin-offers-golden-crown-for-guruvayurappan

ன்னதான் முதலமைச்சர் ஸ்டாலினும் பகுத்தறிவு சிந்தனைகள் நிறைந்த திமுக கட்சிக்காரர்களும் திராவிடம் பேசி வந்தாலும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலாக சென்று வழிபாடு செய்து வருவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்கியது முதல் துர்க்கா ஸ்டாலின் கோவில்களுக்கு சென்று கடவுளை வழிபட்டு வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கூட காஞ்சிபுரம் சென்றிருந்த அவர் காமாட்சி அம்மனை வழிபட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளம் என்று சென்று கடவுள்களை வழிபட்டு வருகிறார். இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னர் வைத்திருந்த வேண்டுதலை மு க ஸ்டாலின் முதல்வரான பிறகு துர்கா ஸ்டாலின் அனைத்து கோயில்களுக்கும் சென்று அவரது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்து வருகிறார். 

கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளத்தில் உள்ள குருவாயூரில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுற்றுவிளக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார். தொடர்ந்து துலாபாரம் செலுத்தியுள்ளார். எடைக்கு எடை சர்க்கரை கொடுத்து அவரது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தார்.

Durga Stalinஅந்த வரிசையில் தற்போது மீண்டும் குருவாயூர் சென்ற துர்கா ஸ்டாலின் குருவாயூரப்பனுக்கு தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

இந்த தங்க கிரீடமானது 32 சவரன் மற்றும் இதன் மதிப்பு ரூபாய் 14 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த தங்க கிரீடத்தை மிகவும் கவனமாக துல்லியமான அளவீடுகளோடு குருவாயூரப்பனுக்கு பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரீடத்திற்கான  ஏற்பாடுகளை செய்தவர் கோவையை சேர்ந்த தொழிலதிபர் சிவஞானம் ஆவார்.

இது மட்டும் இல்லாமல் சந்தனம் அரைக்கும் இயந்திரம் ஒன்றையும் வழங்கியுள்ளார். இதன் மதிப்பு 2 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த இயந்திரத்தை திருச்சூரை சேர்ந்த புத்தோல் ஆர்எம் சத்யம் இன்ஜினியரிங் உரிமையாளர் கே எம் ரவீந்திரன் வடிவமைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

குருவாயூர் சென்று குருவாரப்பனை வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்று நம்பி துர்கா ஸ்டாலின் வேண்டுதலை வைத்துள்ளார். இதனால் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்ற பின் எடைக்கு எடை சர்க்கரை துலாபாரம் அளித்த துர்கா ஸ்டாலின் தற்போது தங்க கிரீடத்தை அளித்துள்ளார் இதனால் அவரது வேண்டுதல் பலமாக இருக்குமோ?