தவெகவுக்கு எதிராக களமிறங்கும் திமுக! 78-ல் வெறும் 3 பேர் தான்... ரகசிய ரிப்போர்டால் திமுக கையில் எடுத்த அரசியல் யுக்தி! லண்டனில் இருந்து வந்ததும் விஸ்வரூபம் எடுக்கும் ஸ்டாலின்!!!



dmk-plans-more-sc-representation-district-secretaries

திமுகவில் பட்டியல் சமூகத்தினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில், மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக ஆய்வு

தற்போது திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 78 மாவட்டங்களில் திருவள்ளூர் ரமேஷ், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ ராஜா மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி. கணேசன் ஆகிய மூவர் மட்டுமே மாவட்டச் செயலாளர்களாக உள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் மிகவும் குறைவான சதவீதமாக இருப்பதால், அமைப்பு ரீதியாக கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அறிவாலயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இவுங்கள வச்சுக்கிட்டு இனி வேலைக்கு ஆகாது... ஸ்டாலின் கையில் அந்த ரகசிய அறிக்கை! தூக்கத்தை துளைத்த சீனியர்கள்....நாளை நடக்கப்போகும் மெகா சம்பவம்..!!!

அரசியல் சூழலை கணக்கில் கொண்ட புதிய வியூகம்

அண்மைய அரசியல் மாற்றங்களும் இந்த முடிவுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, விசிக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில் பட்டியல் சமூக மக்களிடையே கட்சியின் ஆதரவை வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மறுபுறம், திமுக-வின் முக்கிய அரசியல் போட்டியாளரான தமிழக வெற்றிக் கழகம் தனது நிழல் அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு வாய்ப்பளித்தது அரசியல் கவனத்தை ஈர்த்திருந்தது. இதையடுத்து, அந்த அரசியல் நகர்வுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இந்த ஆலோசனை பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

117 மாவட்டங்களாக பிரிக்கும் ஆலோசனை

இதன் ஒரு பகுதியாக, தற்போதுள்ள 78 அமைப்பு மாவட்டங்களை 117 மாவட்டங்களாகப் பிரிக்கும் யோசனையும் கட்சித் தலைமையின் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த புதிய அமைப்பின் அடிப்படையில் குறைந்தது 20 மாவட்டச் செயலாளர் பதவிகளை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மைய தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்து சென்னை திரும்பிய பிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் வேகமடையும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: தவெகவின் அசூர வளர்ச்சி! முதல்வர் விஜய்யின் புதிய கணக்கு... செம ஷாக்கில் ஸ்டாலின்..!!!