100 ஆண்டுகள் பழமையான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி கோவில்களை இடித்துள்ளேன் - திமுக எம்.பி டி.ஆர் பாலு பரபரப்பு பேச்சு.!

100 ஆண்டுகள் பழமையான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி கோவில்களை இடித்துள்ளேன் - திமுக எம்.பி டி.ஆர் பாலு பரபரப்பு பேச்சு.!


DMK MP TR balu fire speech

சர்ச்சை பேச்சால் பரபரப்பை ஏற்படுத்தும் திமுக எம்..பி டி.ஆர் பாலு., தனது தொகுதியில் உள்ள 3 கடவுள்களின் கோவில்களை இடித்துள்ளேன் என தெரிவித்தார். 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு கடந்த சில நாட்களாகவே சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதுகுறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திராவிடர் கழகம் சார்பில் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், அய்யா கீ. வீரமணி மீது கை வைபவனை வெட்டுவேன் என பேசி சர்ச்சையை கிளப்பியிருந்தார். 

இந்த நிலையில், தனது தொகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான கோவிலை இடித்து தள்ளியதாக பேசினார். இது தொடர்பான வீடியோவில், "நான் எனது தொகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களை இடித்து தள்ளியுளேன். 

tamilnadu political

சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி ஆகிய கடவுள்களின் கோவில்களை எங்கள் தொகுதியில் இடித்துள்ளேன். அதனால் எனக்கு ஓட்டு வராது என்பது தெரியும். அந்த ஓட்டை எப்படி வரவைப்பது என்பதும் தெரியும்.

எனது தோழர்கள் கோவிலை இடிக்க வேண்டாம் வாக்குகள் வாராது என கூறினார்கள். ஆனால், அரசின் திட்டங்களை செய்லபடுத்த அதனை அகற்றவேண்டியது கட்டாயம் ஆகியது. அதனால் அகற்றினோம். அதற்கு அருகிலேயே மிகச்சிறய அளவில் அவர்களுக்காக கோவிலை ஏற்படுத்தி கொடுத்தேன்" என பேசினார். 

அவரின் பேச்சை கேட்டு பூரித்துப்போன தொண்டர்கள் மற்றும் அங்கிருந்த திராவிட இயக்கத்தினர் கைதட்டி சிரித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.