அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அதிர்ச்சி! வீட்டின் மீது மோதிய அரசு பேருந்து! துடிதுடித்து பலியான சிறுமி! ஓட்டுநர் மருத்துவமனையில்! தர்மபுரியில் பரபரப்பு...
தர்மபுரி மாவட்டம் உழவன் கோட்டை பகுதியில் பரிதாபகரமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து திடீரென ஸ்டியரிங் பிரச்சினையால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ராமு என்பவரின் வீட்டுச் சுவரில் மோதி நிற்கும் நேரத்தில், வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த அத்விகா என்ற சிறுமி துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
இந்தக் குழந்தை, நரசிம்மன் - சோனியா தம்பதியின் மகளாவார். சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்த நிலையில், பேருந்து ஓட்டுநரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மரண விபத்து, உள்ளூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சந்தோசமாக குற்றாலத்திற்கு சென்ற தம்பதி! அருவியில் குளித்த பின், நொடிப்பொழுதில் கணவனின் மடியில் மயங்கிய மனைவி! அடுத்த நடந்த அதிர்ச்சி...
---
இதையும் படிங்க: இப்படியா சாவு வரணும்! வழக்கம் போல் தேங்காய் பறிக்க சென்ற வியாபாரி! வேலைக்கு போன இடத்தில் நொடியில் வந்த எமன்! கதறும் குடும்பத்தினர்...