காங்கிரஸ் கட்சிக்கு அதிகாலையில் காத்திருந்த பேரதிர்ச்சி!! சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கட்சியினர்!!



congress ex mp died


கடலூர் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், கடலூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவருமான பி.பி.கலியபெருமாள் வெள்ளிக்கிழமை நேற்று சென்னையில் காலமானார்.

இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த பி.பி.கலியபெருமாள் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் 1991-96-ஆம் ஆண்டுகளில் கடலூர் தொகுதி எம்.பி.யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

congress mp

அவருக்கு கே.ஜானகி என்ற மனைவியும், ஜே.கே.சித்தார்த்தன் என்ற மகனும், மருத்துவர் கே.செந்தமிழ்செல்வி, கே.லட்சுமிஅருள் ஆகிய மகள்களும் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (மார்ச் 23) மாலை நடைபெறுகிறது.