" துரோகி விஜயபாஸ்கர் ஒழிக" அவரு கட்சியை விட்டு போய்ட்டாரு! இந்தாங்க லட்டு சாப்பிட்டு கொண்டாடுங்க..! புதுக்கோட்டையில் அதிமுக-வினரின் வெடி கொண்டாட்டா வீடியோ..!!!
அதிமுகவில் நீடித்து வந்த உட்கட்சிப் பரபரப்புக்கு மத்தியில், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவு கட்சிக்குள் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் சி.விஜயபாஸ்கர் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் மேலும் தீவிரமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: BREAKING: இன்றே அதிமுகவில் இறுதி...MLA பதவியை ராஜினாமா செய்யும் ஓபிஎஸ்..... முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைகிறார்..!!!
திடீர் முடிவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
விராலிமலை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த சி.விஜயபாஸ்கர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்ததாக அறிவித்தார். ஏற்கனவே கட்சிக்குள் நிலவி வந்த மோதல்கள் குறித்து பல்வேறு பேச்சுகள் இருந்த நிலையில், இந்த நடவடிக்கை புதிய அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
புதுக்கோட்டையில் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
ராஜினாமா அறிவிப்பு வெளியானதையடுத்து, புதுக்கோட்டையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் வீதிகளில் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு லட்டுகள் வழங்கியும் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முழக்கங்களால் பரபரப்பு
அப்போது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் விஜயபாஸ்கருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | "துரோகி விஜயபாஸ்கர் ஒழிக.. துரோகி விஜயபாஸ்கர் ஒழிக.."
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்.. புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து, மக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்!#SunNews | #Vijayabaskar | #ADMK pic.twitter.com/1doZg2aKfu
— Sun News (@sunnewstamil) June 16, 2026
இதையும் படிங்க: தவெக வேட்பாளர் சினோரா அசோகனுக்கு திடீர் நெஞ்சுவலி! அவசரமாக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ..!!!