பாஜக மகளிரணி நிர்வாகி தற்கொலை.. உருக்கமான கடிதம்.. கைப்பற்றிய போலீஸ்.! 



bjp karnataka women wing admin suicide

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு யஸ்வந்தபுரத்தில் வசித்து வரும் பாஜக மகளிர் அணி பொதுச் செயலாளர் மஞ்சுளா (42 வயது) மிக திறமையாக தான் சார்ந்த கட்சியில் செயல்பட்டு வரும் நபர். கடந்த சில நாட்களுக்கு முன் மஞ்சுளாவின் கணவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். 

இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய நிலையில், கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் விலகி இருந்து வந்தார். இந்த நிலையில், தற்போது வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

bjp

அவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் மஞ்சுளா, "எனக்கு வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாமே கிடைத்தது. ஆனால், நிம்மதி கிடைக்கவில்லை. கடந்து சில நாட்களாகவே நிம்மதி இல்லாமல் தவித்து வருகிறேன். 

இதையும் படிங்க: #Breaking: நாவடக்கம் தேவை.. நீங்கள் மன்னனா? - மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு முதல்வர் சரமாரி கண்டனம்.!

என் தற்கொலைக்கு வேறு எதுவும் காரணம் இல்லை. நான் தான் காரணம்." என்று தெரிவித்து இருக்கிறார். இந்த கடிதத்தை காவல்துறையினர் தடவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: #Breaking: கல்விக்கொள்கை விவகாரம்.. திமுக உறுப்பினர்கள் தொடர் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.!