பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி., டெல்லியை நோக்கி படையெடுக்கும் அரசியல் கட்சிகள்..!!
நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மறுபடியும் எப்படியாவது மத்தியில் ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்று பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. அதேசமயம் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர கூடாது என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
வரும் தேர்தலில், பாஜகவை வீழ்த்த எதிர் கட்சிகள் அவர்களது வேலையை தொடங்கி விட்டது. இதனடிப்படையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜகவுக்கு எதிரான பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இது குறித்து பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் பலப்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும்அவசியம் தற்போது இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் இது குறித்து ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வருகின்ற 18 தேதி நடக்கவிருக்கிறது.
இந்த கூட்டத்தில், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே , துணை முதலமைச்சர் அஜித் பவர் பங்குபெற உள்ளன. மேலும், முன்னாள் பிரதமர் தேவ கவுடா தலைமையிலான மத சார்பற்ற ஜனதா தளம் , சுஷல் தேவ் சமாஜ் கட்சி முகேஷ் சஹானி தலைமையிலான விகாஷில் இன்ஸான் கட்சியும் பங்கேற்க உள்ளன.
இதனை தொடர்ந்து, நடக்கவிருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் நடைபெறும் என்று தெரிகிறது.
மீண்டும் பாஜக ஆட்சி அமைக்குமா? அல்லது மாற்றம் நிகழுமா? என்பது குறித்து வருகின்ற தேர்தலில் தான் தெரியும். மேலும், அதிமுகவை தொடர்ந்து வேறு சில கட்சிகளுக்கும் அழைப்பு வந்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்க படுகிறது.