#BREAKING : விஜயின் TVK கட்சி குறித்து அண்ணாமலை வெளியிட்ட பதிவு வைரல்.!



Bjp anamalai about Vijays TVk

பிரபல தென்னிந்திய நடிகரான விஜய் இன்று தன்னுடைய அரசியல் கட்சி துவக்கத்திற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார். அவருடைய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனது தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது என்றும், எந்த கட்சிக்கும் தான் ஆதரவு இல்லை என்றும் அவரது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK

மேலும் 2026-இல் வரும் சட்டப்பேரவை தேர்தல்தான் அவரது இலக்கு என்றும் அவர் அதில் மேற்கோள் காட்டியுள்ளார். விஜய் கட்சி அறிவிப்பை வெளியிட்டவுடன் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக தமிழக தலைவரான அண்ணாமலை விஜயின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TVK

அந்த பதிவில், "தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு @actorvijay அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்."என்று தெரிவித்துள்ளார்.