பதற்றத்தில் தமிழக அரசியக்காலம்.. டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை.. அடுத்தடுத்து நடக்கப்போவது என்ன?..!

பதற்றத்தில் தமிழக அரசியக்காலம்.. டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை.. அடுத்தடுத்து நடக்கப்போவது என்ன?..!


Annamalai Went to Delhi Meet PM

 

2024 பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாடு பாஜக தனித்து நின்று களம்காண தயாராவதாக தெரியவருகிறது. பாஜகவில் அண்ணாமலை தலைவர் பொறுப்பை பெற்ற பின்னர் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையில், அவரின் மீது பல விமர்சனத்தை முன்வைத்து கட்சியின் மூத்த தலைவர்கள் மாற்று காட்சியிலும் இணைந்து வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வீணா என்ற நபர்கள், யூடியூபில் அண்ணாமலைக்கு எதிரான பல ஆடியோ, பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்ட யூடியூப் சேனல் உரிமையாளர்கள் குறித்த விடீயோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

annamalai

இந்த நிலையில், நேற்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் இனி நாம் தனித்து களம்காண்போம். கூட்டணி என்ற பேச்சு வந்தால், நான் தலைவர் பொறுப்பில் இருக்கமாட்டேன். எனது பதவியை ராஜினாமா செய்து தொண்டராக பணியாற்றுவேன் என பேசியிருந்தார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி பிரிவது உறுதியாகியுள்ளதாக அரசியல் மட்டத்தில் பேச்சுக்கள் எழத்தொடங்கிவிட்டன. 

தமிழகத்தில் உருவாகியுள்ள அரசியல் பரபரப்பு சூழலில் அண்ணாமலை மார்ச் 26ம் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது கட்சியில் தனது முடிவு குறித்து விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.