ரூ.100 கோடி ஊழல் புகாரில் அன்பில் மகேஷ் அதிரடி கைது..! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்... தீவிரமடையும் அரசியல் மோதல்!!!
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அன்பில் மகேஸ் கைது: ஸ்டாலின் கண்டனம்
அன்பில் மகேஸ் கைது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு அன்பில் மகேஸ் முழு ஒத்துழைப்பு அளித்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், அப்படியிருந்தும் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: திடீரென உளவுத்துறை கொடுத்த சீக்ரெட் வார்னிங்! முதல்வர் விஜய்யின் இறுதி முடிவு என்ன..? அரசியல் வட்டாரத்தில் விவாதம்..!!!
மேலும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளை மறைக்கவே ஆளும் தவெக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்படி எதிர்கொள்வார் என ஸ்டாலின் கருத்து
அன்பில் மகேஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார் என்றும் ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கைகள் மூலம் மக்களின் அதிருப்தியிலிருந்து தப்பித்துவிடலாம் என தவெக அரசு நினைத்தால், அந்த எண்ணம் பலிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தமிழக அரசியலில் தீவிரமடையும் மோதல்
ரூ.100 கோடி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்ட நிலையில் , அதற்கு ஸ்டாலின் தெரிவித்துள்ள எதிர்ப்பும் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒருபுறம் கைது நடவடிக்கை தொடர்பான வழக்கு விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், மறுபுறம் ஆளும் தவெக அரசுக்கும் திமுகவுக்கும் இடையிலான அரசியல் மோதலும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யை உலுக்கிய உளவுத்துறை ரிப்போர்ட்! டெல்லியின் தரமான மூவ்... அரசியலில் அதிகரிக்கும் பரபரப்பு..!!!