தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
"அதிமுகவிற்கு கண்ணீர் அஞ்சலி; தேர்தல் வந்தாலே நாடகம் தான்..." சீமான் கடும் விமர்சனம்.!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக தலைமையில் கூட்டணி ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்தக் கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியையும் இழுக்கும் முயற்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் சீமான், அதிமுகவை கடுமையாக விமர்சித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மாற்று கொள்கையை உடையவர்களுடன் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் பேசிய அவர், நாம் தமிழர் உள்ளிட்ட மாற்று கொள்கைகளை உடைய கட்சியினரையும் அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் கடந்த காலங்களிலும் இதுபோன்ற கூட்டணி அமைந்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.
கூட்டணிக்கு மறுத்த நாதக
இந்நிலையில் இது குறித்து பேசிய சீமான் வர இருக்கின்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என தெரிவித்தார். மேலும் தங்களது கட்சிக்கு அடிப்படை மாற்றமே இலக்கு எனவும் கூறினார். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுடன் கூட்டணி அமைத்தால் மாநில தன்னாட்சி எவ்வாறு பாதுகாக்கப்படும் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: "10 ரூபாய் அமைச்சரும் ஸ்டாலினும் ஜெயிலுக்கு போறது உறுதி..." சர்ச்சையை கிளப்பிய எச். ராஜா பேட்டி.!!
அதிமுகவிற்கு கண்ணீர் அஞ்சலி
இந்நிலையில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு அதிமுக கட்சி கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருப்பது அரசியல் நாடகம் என கடுமையாக விமர்சித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக பேசிய அவர், அதிமுகவின் கண்ணீர் அஞ்சலி போராட்டத்திற்கு தாங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக கடுமையாக தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்ற நாடகங்களை பார்க்க வேண்டியது நம் தலைவிதி எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "கலைஞர் கருத்தை அமோதித்ததால் கல்லடி பட்டேன்..." திமுக-வில் இருந்து விலகியது ஏன்.? மனம் திறந்த குஷ்பூ.!!