"10 ரூபாய் அமைச்சரும் ஸ்டாலினும் ஜெயிலுக்கு போறது உறுதி..." சர்ச்சையை கிளப்பிய எச். ராஜா பேட்டி.!!



cm-stalin-and-senthil-balaji-will-end-up-in-jail-soon-b

தமிழக முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் செந்தில் பாலாஜியும் விரைவில் சிறைக்குச் செல்வார்கள் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்திருக்கிறார். பழனியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் விழாவில் கலந்து கொண்ட அவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது இதனை தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

பூரண கும்ப விழா

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பழனிக்கு சென்ற அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பூரண கும்பம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா மற்றும் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா பேட்டியளித்தார்.

tamilnadu

நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ்

செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய ராஜா, இந்தியாவில் முதல் முதலாக நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி தான் 2013 ஆம் வருடம் அறிமுகப்படுத்தியது என தெரிவித்தார். மேலும் அப்போது காங்கிரஸுடன் கூட்டணியிலிருந்த திமுகவும் நீட் தேர்விற்கு ஆதரவாக செயல்பட்டது என தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வை மாற்ற வேண்டுமென்றால் திமுக அரசு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: "கலைஞர் கருத்தை அமோதித்ததால் கல்லடி பட்டேன்..." திமுக-வில் இருந்து விலகியது ஏன்.? மனம் திறந்த குஷ்பூ.!!

விரைவில் சிறைக்குச் செல்லும் முதல்வர்

மேலும் தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் ஆட்சியில் ஊழல் மற்றும் அராஜகம் நிறைந்திருப்பதாக தெரிவித்தார். மாநிலம் முழுவதும் போதை பொருட்களின் புழக்கம் தலை விரித்தாடுவதாக குற்றம் சாட்டிய அவர், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பத்து ரூபாய் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தமிழகத்தின் கெஜ்ரிவாலான முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் சிறைக்குச் செல்வார்கள் எனவும் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்... "முதல்வரை தீர்மானிக்கும் விஜய்..." அரசியல் விமர்சகர்கள் பரபரப்பு கனிப்பு.!!