13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
பரபரப்பாகும் பனையூர் வட்டாரம்.. நாளை காலை கட்சிக்கொடியை அறிமுகம் செய்யும் நடிகர் விஜய்.!
2026 சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கவுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தோற்றுவித்துள்ளார். கட்சிக்கான ஆட்கள் சேர்ப்பு, நிர்வாகிகள் உட்பட பல பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், 2024 ஆகஸ்ட் 22ம் தேதி விஜய் தனது கட்சிக்கொடியை அறிமுகம் செய்கிறார்.
இந்த நிகழ்ச்சி சென்னை ஈ.சி.ஆரில் உள்ள பனையூர் கட்சி அலுவலத்தில் நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்கு விஜயின் கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், சொந்த இடத்தில் நிகழ்ச்சி நடைபெறுவதால் காவல்துறை அனுமதி தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை பாதுகாப்பு
இதனையடுத்து, நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து கட்சி அலுவலகம் செல்லும் வழியில் ரசிகர்கள் ஆட்பறிப்பார்கள் என்பதால், வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் வரை பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு தற்போது காவல்துறை பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து கட்சிக்கொடி ஏற்றினாலும், ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திடீரென வருகை தந்தால் நிலைமை கையை மீறி செல்லும் என்பதால் காவல்துறை சார்பில் பாதுகாப்பும் வழங்கப்படவுள்ளது. இதனால் நாளை பனையூர் பரபரப்புடன் காணப்படும்.