கும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ!

கும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ!


Why kumbakarnan sleeping for six months reasons in tamil

கும்பகர்ணனை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானவர் அவர். இராமாயண கதை படி கும்பகர்ணன் ராவணனின் இளைய சகோதரர் ஆவார். 6 மாதங்கள் தொடர் தூக்கம், 6 மாதம் சாப்பாடு இப்படித்தான் நாம் அவரை பற்றி கேள்வி பட்டிருப்போம்.

கும்பகர்ணனுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை? அவரது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? வாங்க பாக்கலாம். நல்ல புத்தி கூர்மையும் நெறி தவறாத வாழ்க்கை முறையையும் இரக்க குணத்தையும் கொண்டவர்தான் கும்பகர்ணன்.

கும்பகர்ணன் மீது தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சற்று பொறாமை. இதனால் கும்பகர்ணனை பழிவாங்க சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் தேவேந்திரன்.

Mystery

இந்நிலையில் கும்பகர்ணன் தனது அண்ணன்கள் இராவணன் மற்றும் விபீஷணன் உடன் சேர்ந்து பிரம்மதேவரிடம் வரம் வேண்டி தவம் செய்தார். இவர்களின் தவத்தில் மகிழ்ச்சி அடைந்த பிரம்ம தேவன் வேண்டிய வரத்தை கேட்குமாறு கூறினார்.

இராவணன் மற்றும் விபீஷணன் தங்களுக்கு இந்திரா சனா வரத்தை தருமாறு கேட்க, கும்பகர்ணன் மட்டும் நித்ராசனா வரத்தை தவறுதலாக கேட்டு பெற்றுக் கொண்டார். தனது தவறை அவர் உணர்ந்த நேரத்தில் அந்த வரத்தை தந்தோம் என பிரம்ம தேவனும் கூறிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கும்பகர்ணன் பிரம்ம தேவனிடம் வேண்டி கேட்க அவர் ஒரு வருடத்தில் 6 மாதங்களை குறைத்து மீதி 6 மாதங்கள் அவர் தூக்க நிலையில் இருக்கும்படி வரம் கொடுத்தார்.

கும்பகர்ணன் வரத்தை தவறுதலாக கேட்க காரணமாக இருந்தது தேவேந்திரன்தான். இந்திரன் சரஸ்வதி இடம் சென்று கும்பகர்ணனை இந்திரா சனாத்திற்கு பதிலாக நித்ராசனாத்தை கேட்க செய்யுங்கள் என மன்றாடிக் கேட்டுக் கொண்டார். இந்திரனின் வேண்டுதலை என்று சரஸ்வதி தேவியும் அவ்வாறே செய்தார்.