லைப் ஸ்டைல்

பெண்களுக்கு அந்த மாதிரி ஆண்களைத்தான் அதிகம் பிடிக்குமாம்! அதற்கு என்ன காரணம் தெரியுமா?

Summary:

Why girls are likes longer man for love

பெண்கள் தங்களது வருங்கால துணை எப்படி இருக்க வேண்டும் என பல கனவுகள் வைத்திருப்பார்கள். அதில் பெரும்பாலான பெண்கள் எண்ணுவது தனக்கு வரவிருக்கும் துணை தன்னை விட உயரமாக இருக்க வேண்டும் என்பதுதான். அதற்கு என்னெல்லாம் காரணம் என்று பார்க்கலாம் வாங்க.

1 . பாதுகாப்பு:
ஒரு உயரமான ஆண் தன் பக்கத்தில் நிற்கும்போது பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்களாம். அதற்கு காரணம், உயரமான ஆண்கள் பார்ப்பதற்கு வலிமையானவர்களாகவும், அவர்கள் தங்கள் பக்கத்தில் நிற்கும்போது மற்றவர்கள் தங்களை சீண்ட மாட்டார்கள் எனவும் பெண்கள் எண்ணுகிறார்களாம்.

2 . கட்டிபிடித்தல்:
உயரமான ஆண்கள் பெண்களை கட்டி அணைக்கும் போது ஆண்களின் இதய துடிப்பை பெண்களால் உணர முடியுமாம். இது பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

3 . செக்சியானவர்கள்:
உயரமான ஆண்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், செக்சியாகவும் தெரிவார்களாம். மற்ற ஆண்களை விட இவர்கள் பார்ப்பதற்கு சற்று அழகாகவும், மேன்லியாகவும் தெரிகிறார்களாம்.

4. அரவணைப்பு
சோகமான தருணங்களிலும் மகிழ்ச்சியான தருணங்களிலும் உயரமான ஆண்களிடமிருந்து கிடைக்கும் அரவணைப்பு அழகான ஒன்று என பெண்கள் உணர்கின்றனர்.


Advertisement