குபேர பொம்மையை வீட்டில் எங்கு வைத்தால் செல்வம் பெருகும் தெரியுமா?

குபேர பொம்மையை வீட்டில் எங்கு வைத்தால் செல்வம் பெருகும் தெரியுமா?


Where to place kupera pommai for increasing money

வீட்டில் செல்வம் செழிப்பதற்காக பல விஷயங்களை நாம் செய்வது உண்டு. அதில் ஒன்றுதான் இந்த குபேர பொம்மை. குபேர பொம்மையை வீட்டில் வைத்து சாமியாக வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. பொதுவாக வீட்டின் கிழக்கு திசை அதிர்ஷ்டம் தரும் திசையாக கருதபடுகிறது.

சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும். கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.

kupera pommai

மேலும் குபேர பொம்மையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகுவதோடு நமக்கு நிறைய அதிர்ஷ்டமும் வந்து சேரும். மேலும் . நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.

தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும். மேலும் சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.