BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வாட்ஸப்பில் புது வசதி! மக்கள் மிகவும் எதிர்பார்த்த அந்த வசதி வந்துவிட்டது! முழு விவரம் இதோ
வாட்ஸப்பில் குறிப்பிட்ட நபர் அல்லது குழுவின் நோட்டிபிகேஷனை நிரந்தரமாக மியூட் செய்ய புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது வாட்சப் நிறுவனம்.
உலகம் முழுவதும் பலகோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது வாட்சப் நிறுவனம். நாளுக்கு நாள் வாட்சப்பின் பயன்பாடு அதிகரித்துக்கொண்ட வரும்நிலையில், பயனர்களின் வசதிக்கேற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்துவருகிறது வாட்சப் நிறுவனம்.
அந்த வகையில் தற்போது புது வசதி ஒன்றினை வாட்சப் அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக வாட்ஸப்பில் நமக்கு ஒருவர் மெசேஜ் அனுப்பும்போது நமக்கு நோட்டிபிகேஷன் வந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ஒரு குழுவில் அனைவரும் சாட் செய்யும்போது தொடர்ந்து நோட்டிபிகேஷன் வந்த வண்ணம் இருக்கும். பல நேரங்களில் அவை நம்மை எரிச்சலடைய செய்யும்.

இதுபோன்று குறிப்பிட்ட நபர் அல்லது குழுவின் நோட்டிபிகேஷனை தடை செய்ய ஏற்கனவே வாட்ஸப்பில் வசதி உள்ளது. ஆனால் 8 மணி நேரம், ஒரு வாரம் அல்லது அதிகபட்சமாக ஓராண்டு வரை மட்டுமே அந்த நோட்டிபிகேஷனை நம்மால் தடை செய்ய முடியும். நாம் தேர்வு செய்த காலம் முடியும் பட்சத்தில் மீண்டும் நாம் மியூட் செய்ய வேண்டும்.
தற்போது இந்த வசதியை Always (எப்போதும்) என மாற்றியுள்ளது வாட்ஸாப் நிறுவனம். இந்த வசதி மூலம் எந்த ஒரு நபர் அல்லது குழுவில் இருந்து வரும் நோட்டிபிகேஷனை இனி நிரந்தரமாக நிறுத்திவைக்க முடியும்.
எந்த நபரை அல்லது குழுவை நீங்கள் ம்யூட் செய்ய வேண்டுமோ, அந்த சாட்-இன் வலதுபக்க ஓரத்தில் உள்ள 'ம்யூட் நோட்டிபிகேஷன்' (mute notification) ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
